கலிப்பாவில் பிற பா அடிகள்மயங்குதல்

கலிப்பாவில் வெண்பா அடிகளும் ஆசிரிய அடிகளும் மயங்கி வரும்.‘காமர் கடும்புனல்’ (கலி-39) என்ற கலிப்பாவுள், வெண்பாக்க ளும்ஆசிரிய அடிகளும் பலவாக மயங்கிவர, அப்பாடல் ஆறடிச் சுரிதகத்தான்முடிந்தது. (யா.க.30)முல்லைக்கலி 3ஆம் பாடலில், முடுகியலடியாகிய முதலடி யும், ஏனையமூன்றாமடியும் முச்சீரான் வந்தன.‘நின்கண்ணாற் காண்பென் மன்யான்’ (குறிஞ்சிக். 3)இஃது இடையில் வந்தது.‘செய்தானக் கள்வன் மகன்’ (குறிஞ்சிக் .15)இது கலிவெண்பாவின் ஈற்றடியாக வந்தது. (தொ. செய். 70 நச்.)சிந்தடி, ஏழு முதல் ஒன்பது எழுத்தின்காறும் பெற்று வருவது.(தொ. செய். 55 இள.)கலிப்பாவின் ஈற்றடியும் ஈற்றயலடியும் எழுசீர்களையுடை யவாய் வரும்.அஃதாவது கலிப்பாவின் இறுதியில் வரும் சுரிதகம் ஆசிரியப் பாவாக அன்றிவெண்பாவாக இருக்கும். ஆசிரியப் பாவாயின், ஆசிரியஅடி பலவும் வந்துஈற்றயலடி முச்சீராகவும் ஈற்றடி நாற்சீராகவும் அமையும். கட்டளைவெண்பாவோ, சீர்வகை வெண்பாவோ, சுரிதகமாக அமை யின் வெண்பாவிற்குரியமரபின்படி ஈற்றயலடி நாற்சீராகவும் ஈற்றடி முச்சீராகவும் அமையும்.ஆகவே, இவ்வாறு முடிதலே சிறப்பு; மூன்றடியில் குறைந்த வெள்ளைச்சுரிதகம் வருதல் சிறப்பின்று. இருசீரும் நாற்சீரும் ஐஞ்சீருமாகியஅடிகளால் முடியும் கலிப்பாக்கள் கொச்சகத் தின்பாற்படும். அவைஇத்துணைச் சிறப்பில. கலிக்கு உறுப்பாய் வரும் வெண்பாவில் அருகிஆசிரியத்தளை வருதலும் உண்டு.எ-டு : இனைநல முடைய கானகம் சென்றோர்புனைநலம் வாட்டுநர் அல்லர் மனைவயின்பல்லியும் பாங்கொத் திசைத்தனநல்லெழி லுண்கணும் ஆடுமால் இடனே’ (கலி. 11)இஃது ஆசிரியச் சுரிதகம்.‘மெல்லியான் செவிமுதல் மேல்வந்தான் காலைபோல்எல்லாம் துயிலோ எடுப்புக நின்பெண்டிர்இல்லின் எழீஇய யாழ்தழீஇக் கல்லாவாய்ப்பாணன் புகுதராக் கால்’ (கலி. 70)இது வெள்ளைச் சுரிதகம்; ‘மெல்லியான் செவிமுதல்’ என இதன்கண்ஆசிரியத் தளையும் வந்தது. (தொல். செய். 76, 77 நச்.)இருசீரும் நாற்சீரும் ஐஞ்சீரும் ஆகிய அடிகளான் முடியும்கலிப்பாக்களெல்லாம் கொச்சகமாம். அவை ஆசிரியம் அல்லது வெண்பாவான்முடியும் கலிப்பாப் போலச் சிறப்பில.வெள்ளைச் சுரிதகம் மூன்றடியில் குறைந்து வரின் கலிப்பா பண்புறமுடியாது ஆதலின், சுரிதகம் மூன்றடியிற் குறையா திருப்பதே சிறப்பு.எ-டு :‘இரவில் வாரலை ஐய விரவுவீஅகலறை வரிக்கும் சாரல்பகலும் பெறுவைஇவள் தடமென் தோளே! (கலி.49) (தொ.செய். 77 நச்.,பேரா.)