கலிப்பாவில் அறுசீரடி எழுசீரடிவருதல்

கலிப்பாவில் நாற்சீரடிக்கு முன்னும் பின்னும் அறுசீரடி தனக்குரியவெண்டளையோடன்றி ஆசிரியத் தளையொடு வருதலும் உண்டு.எ-டு : ‘முன்னைத்தம் சிற்றில் முழங்கு கடலோதம் மூழ்கிப்போகஅன்னைக் குரைப்பன் அறிவாய் கடலேயென் றலறிப் பேரும்தன்மை மடவார் தளர்ந்துகுத்த வெண்முத்தம்புன்னை அரும்பேய்ப்பப் போவாரைப் பேதுறுக்கும் புகாரேஎம்மூர்’இப்பாடற்கண், மூன்றாமடி நேரடியாக முன்னும் பின்னும் அறுசீரடிகள்வந்தன.இனி, ஒரு பாடல் முழுதுமே அறுசீரடியாய் வருதலும் உண்டு.எ-டு :‘தொக்குத் துறைபடியும் தொண்டையஞ்செவ் வாய்மகளிர் தோள்மேல்பெய்வான்கைக்கொண்ட நீருள் கருங்கண் பிறழ்வ கயலென் றெண்ணிமெய்க்கண்ணும் பெய்கல்லார் மீண்டுங்கரைக் கேசொரிந்துமிளிர்வ காணார்எக்கர் மணற்கிளைக்கும் ஏழை மகளிர்க்கே எறிநீர்க் கொற்கை’இவை கொச்சகக் கலி.‘வரைபுரை திரைபோழ்ந்து மணநாறு நறுநுதற் பொருட்டுவந்தோய்’என ஆசிரியத்தளையானும் அறுசீரடி வந்தது.அறுசீரடியை இருசீர் முச்சீர் அடிகளாகத் துணித்தல் கூடாது.கலிக்கு எழுசீரான் வரும் அடி முடுகியற்கண்ணே பயின்று வரும்.எ-டு :‘கவிரிதழ் கதுவிய துவரித ழரிவையர் கலிமயிற் கணத்தொடுவிளையாட’என எழுசீரடி முடுகி வந்தது. இங்ஙனம் முடுகி வருதல் கலிக்கும்பரிபாடலுக்கும் நிகழும். (தொ. செய். 64, 65. நச்.)