கலிப்பாவிலும் ஆசிரியப்பாவிலும்வரும் கனிச்சீர்கள்

எ-டு : ‘புனற்படப்பைப் பூந்தாமரைப் போதுற்ற புதுநீருள் இனக்கெண்டை இரைதேரிய இருஞ்சிறைய மடநாரை’இக்கலித் தரவுஅடிகளுள் தேமாங்கனி, புளிமாங்கனி என்ற நிரைநடு இயலாவஞ்சி உரிச்சீர்கள் வந்தன.எ-டு : ‘மாரியொடு மலர்ந்த மாத்தாட் கொன்றை’‘குறிஞ்சியொடு கமழும் குன்ற நாட’இவ்வாசிரிய அடிகளுள் தேமாங்கனி, புளிமாங்கனி என்ற வஞ்சிஉரிச்சீர்கள் வந்தன.எ-டு : ‘வீங்குமணி விசித்த விளங்குபுனை நெடுந்தேர்’இவ்வாசிரிய அடியுள் தேமாங்கனி புளிமாங்கனி என்ற வஞ்சிச் சீர்கள்வந்தவழி, இடையே ‘புளிமா’ என்ற இயற்சீர் வந்தது.எ-டு : ‘நிரைந்து நிரைந்து சிறுநுளைச்சிய ர் நெடுங்கானல் விளையாடவும்’எனக் கொச்சகக் கலியுள் அருகி நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர்வந்தது.பாவினங்களில் கருவிளங்கனி, கூவிளங்கனி என்ற நிரை நடுவாகிய வஞ்சிஉரிச்சீர் வரப்பெறும்.எ-டு : ‘ குளிர்கொடியன குழைமாதவி குவிமுகையன கொகுடி’ (சூளா. தூது 4)எனக் கலிவிருத்த அடியுள் கருவிளங்கனிச்சீர்கள் வந்தன.எ-டு : ‘தனிவரலெனத் தலைவிலக்கலின் இறுவரைமிசைஎறிகுறும்பிடை’என ஆசிரியத் துறையுள் கருவிளங்கனிச்சீர்கள் வந்தன.(யா. க. 16 உரை.)