அளவடியின் மேல்நிலையான 13, 14 எழுத்துக்களும், நெடிலடி நிலமாகிய 15முதல் 17 எழுத்து எல்லையும், கழிநெடிலடி நிலமாகிய 18 முதல் 20 எழுத்துஎல்லையும் ஆகப் பதின்மூன் றெழுத்து முதல் இருபது எழுத்து முடியக்கலிப்பா அடிக்கு உரிய எழுத்து எல்லையாம். இது கட்டளைக் கலியடிக்கேவரையறை.சீர்வகைக் கலியடி 13 முதல் 20 என்ற எழுத்தெல்லையின் குறைந்துவரும்.எ-டு :‘ஐயிரு தலையின் அரக்கர் கோமான்’ (கலி. 38 – 11எழுத்தடி.)‘சுற்றமை வில்லர் சுரிவளர் பித்தையர்’ (கலி. 4 – 12எழுத்தடி.)(தொ. செய். 59 நச்.)