கலிப்பாவின் வகை நான்கும் அவற்றின்முறைவைப்பும்

ஒத்தாழிசைக்கலி, கலிவெண்பாட்டு, கொச்சகக்கலி, உறழ்கலி எனக் கலிப்பாநால்வகைத்து.ஒத்தாழிசை என்னும் உறுப்புடைய செய்யுள் ஒத்தாழிசை யாம்.ஒத்துஆழிசை – வினைத்தொகை. தாழிசை என்பது தானுடைய துள்ளல்ஓசைத்தாம். தாழ்தல் துள்ளலில் தாழம்படுதல் என்னும் பொருட்டு. தரவுஓசைசற்று வேறுபடினும் இத் தாழிசை ஓசை வேறுபடலாகாது. கொச்சகம்முதலியவற்றுள் இடைநிலைப்பாட்டுக்கள் தாழமுடையனவன்றியும் வரலாம்.இதற்குப் பெரும்பாலும் ஓசை தவறுதல் கூடாது. தாழிசை மூன்றடுக்கிவருதலானும், ஒழிந்த கலி உறுப்புக்களின் சிறத்த லானும் தாழிசை என்றபெயர் தலைமையும் பன்மையும் பற்றி வந்த பெயராம். கட்டளைக்கலிப்பாவுக்குத் தரவு மிகத் துள்ளாது வரத் தாழிசை அதனின் தாழம்பட்டுமூன்றடுக்கி வருதலின் ஒத்தாழிசை எனப் பெயர் பெற்றது. சீர்வகைக்கலியுள் தரவு மிகத் துள்ளி வரும். இதற்குத் தாழிசை ஓசை தாழம்பட்டேவருதலும், சிறுபான்மை நேரீற்றியற்சீர் வருத லும், கொச்சகத்தில் தாழிசை(ஒத்த தாழிசை ‘ஒத்தாழிசை’ என்பது நச். கருத்து.)‘நீயே,வினைமாண் காழகம் வீங்கச் சுற்றிப்புனைமாண் மரீஇய அம்பு தெரிதியே’ (கலி. 7)எனத் தாழம்பட்ட ஓசையின்றி வருதலும் கொள்ளப்படும்.தாழிசைகள் தம்மில் ஒத்து வருதலானும் சிறப்புடைமையா னும்ஒத்தாழிசைக் கலி முதலில் கூறப்பட்டது. கலித்தொகை 150 கலியுள்ளும்ஒத்தாழிசைக்கலி 68 வந்துள்ளது. (என்பர் பேரா.)இதற்கும் கொச்சகத்துக்கும் இடையே கலிவெண்பாட்டுக் கூறியது, அதுவும்இவைபோல உறுப்புக்களை உடைத்தாகி வரும் என்றற்கு.தரவும் போக்கும் சிறுபான்மை இன்றியும் வருதலின் கொச்சகம் அதன்பின்வைக்கப்பட்டது.தரவும் அடக்கியலும் இன்றி வருதலே பெரும்பான்மையாத லின், உறழ்கலிஈற்றில் வைக்கப்பட்டது. (தொ. செய். 130 பேரா., நச்.)