கலிப்பாவின் பொதுவிலக்கணம்

துள்ளல் ஓசைத்தாய், நேரீற்றியற்சீரும் நிரைநடுவாகியவஞ்சியுரிச்சீரும் வாராது, நிரை முதலாகிய வெண்பா உரிச்சீர்மிக்கு,நேரடித்தாய், தன்தளையோடு அயல்தளை தட்டும் வருவது; புறநிலை வாழ்த்து,வாயுறை, அவையடக்கு, செவியுறை என்னும் பொருள்மேல் வாராது, 13 எழுத்துமுதல் 20 எழுத்து வரை உயர்ந்த எட்டு நிலமும் பெற்று அளவடி மிகுந்துவரும் இயல்பிற்று; ஒத்தாழிசைக்கலி, வெண்கலி, கொச்சகக்கலி எனமூவகைத்து. அம்போதரங்க உறுப்புக்களிலும் ஒருசார் அராகத்திலும்நேரீற்றியற்சீர் வரப்பெறும்.கலிப்பா வெள்ளைச் சுரிதகத்தாலோ ஆசிரியச் சுரிதகத் தாலோமுற்றுப்பெறுவது. ஒருசார்க் கொச்சகக்கலிகள் கலியடியானே இறுவனவுமுள.ஆசிரியநேர்த்தளைகள் (நேரொன்றாசிரியத்தளை) கலிப்பாவின் மிக்கு வாரா.(யா. க. 79 உரை)