கலிப்பாவின் இறுதி

கலிப்பாவின் ஈற்றடியும் ஈற்றயலடியும் சேர ஏழு சீர்களை உடையவாய்வரும். அஃதாவது கலிப்பாவின் இறுதியில் வரும் சுரிதகம் ஆசிரியப்பாவாகஅல்லது வெண்பாவாக இருக்கும். ஆசிரியப்பாவாயின், ஆசிரிய அடி பலவும்வந்து ஈற்றயலடி முச்சீராகவும் ஈற்றடி நாற்சீராகவும் அமையும். கட்டளைவெண்பாவோ சீர்வகை வெண்பாவோ சுரிதகமாக அமையின் வெண்பாவிற்குரிய மரபுமாறாது ஈற்றயலடி நாற்சீராகவும் ஈற்றடி முச்சீராகவும் அமையும்.இவ்வாறு முடிதலே சிறப்பு; மூன்றடியிற் குறைந்த வெள்ளைச் சுரிதகம்வருதல் சிறப்பன்று. இருசீரும் நாற்சீரும் ஐஞ்சீரு மாகிய அடிகளால்முடியும் கலிப்பாக்கள் கொச்சகத் தின்பாற்படும். அவை இத்துணைச்சிறப்பில. கலிக்கு உறுப் பாய்வரும் வெண்பாவில் அருகி ஆசிரியத்தளைவருதலு முண்டு.எ-டு : ‘இனைநல முடைய கானகம் சென்றோர்புனைநலம் வாட்டுநர் அல்லர் மனைவயின்பல்லியும் பாங்கொத் திசைத்தனநல்லெழில் உண்கணும் ஆடுமால் இடனே’ (கலி.11)இஃது ஆசிரியச் சுரிதகம்.‘மெல்லியான் செவிமுதல் மேல்வந்தான் காலைபோல்எல்லாம் துயிலோ எடுப்புக நின்பெண்டிர்இல்லின் எழீஇய யாழ்தழீஇக் கல்லாவாய்ப்பாணன் புகுதராக் கால்.’ (கலி. 70)இது வெள்ளைச்சுரிதகம். ‘மெல்லியான் செவிமுதல்’ என ஆசிரியத்தளையும்வந்தது.இருசீரும் நாற்சீரும் ஐஞ்சீரும் ஆகிய அடிகளான் முடியும்கலிப்பாக்கள் எல்லாம் கொச்சகமாம். அவை ஆசிரியம் அல்லது வெண்பாவான்முடியும் கலிப்பாவைப் போலச் சிறப்பில.வெள்ளைச்சுரிதகம் மூன்றடியில் குறைந்துவரின் கலிப்பா பண்புறமுடியாது. ஆதலின் சுரிதகம் மூன்றடியிற் குறையாத வெண்பாவாக இருத்தல்வேண்டும். ஆசிரியச் சுரிதகமும் மூன்றடியிற் குறையாதிருப்பதேசிறப்பு.எ-டு : ‘இரவின் வாரலை ஐய! விரவு வீஅகலறை வரிக்கும் சாரற்பகலும் பெறுவையிவள் தடமென் தோளே’ (குறிஞ்சிக். 13) (செய். 77நச்., பேரா.)இது மூன்றடி ஆசிரியச் சுரிதகம். (தொ. செய். 76, 77 நச்.)