கலிநிலைத்துறை

அடிமறியாகாமல், ஐஞ்சீரடி நான்காய் வருவது.எ-டு : ‘யானும் தோழியும் ஆயமும் ஆடும்துறைநண்ணித்தானும் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல்கானும் புள்ளும் கைதையும் எல்லாம் கரியன்றே’. (யா.க. 88உரை)