ஐஞ்சீரடி நான்காய் ஒரு விகற்பமாய் நிகழ்வது கலித்துறை யாம்.இவற்றுள் அடிமறியாய் ஐஞ்சீர் நான்கடியாய் வருவன கலி மண்டிலத்துறை;அடிமறியாகாதே ஐஞ்சீர் நான்கடியாய் வருவன கலிநிலைத்துறை எனப்படும்.இவையிரண்டும் பதினான்கு தளையான் முரண இருபத்தெட்டு ஆகும். இதுகொச்சகக் கலிப்பாவின் இனம். (யா. க. 88 உரை)