கலித்துறை பன்னிரண்டு வகைகள்

1. குற்றெழுத்தையோ ஒற்றெழுத்தையோ இறுதியாக உடைய மாச்சீரொடுகூவிளச்சீரும் அடுத்து இரண்டு விளச்சீரும் இறுதியில் ஒரு மாச்சீரும்புணர வரும் ஐஞ்சீரடி நான்காகி அமைவது.மாச்சீர் – தேமா, புளிமா; விளச்சீர் – கருவிளம், கூவிளம்.எ-டு : ‘பூந டுங்கின மணிக்குலம் நடுங்கின புரைதீர்வான டுங்கின மாதிரம் நடுங்கின வரைகள்தாந டுங்கின புணரிகள் நடுங்கின தறுகண்தீந டுங்கின நிருதர்கோன் பெரும்படை செல்ல’ (கந்த. திக்கு.29)‘நிருதர் கோன்’ என்ற காய்ச்சீர் விளச்சீரின் தானத்தில்வந்துளது.2. குற்றெழுத்தை இறுதியாகவுடைய மாச்சீர், கூவிளச்சீர், இரண்டுவிளச்சீர், இறுதியில் காய்ச்சீர் – புணர வரும் ஐஞ்சீரடி நான்காகிவருவது.எ-டு : ‘இரதி இன்னணம் வருந்திடத் தொன்மைபோ லெங்கோமான்விரத மோனமோ டிருத்தலும் முன்னரே விறற்காமன்கருது முன்பொடி பட்டது கண்டனர் கலங்குற்றார்சுருதி நன்றுணர் திசைமுகன் முதலிய சுரரெல்லாம்’. (கந்த. மோன.1)3. மாச்சீர், புளிமாச்சீர், புளிமாங்கனி, தேமா, தேமா – என்றமையும்ஐஞ்சீரடி நான்காகி வருவது.எ-டு : ‘அன்னா ரமருங் களஞ்சென்றயி லேந்து நம்பிநன்னா யகமாந் திருநாமந வின்று போற்றிப்பொன்னா டிறைகூர் திருநீங்கிய புங்க வன்றன்முன்னா லணுகி இருந்தானடல் மொய்ம்பின் மேலான்’(கந்த. வீரவாகு. 8)4. காய்ச்சீர், தேமா, புளிமாங்கனி, தேமா, தேமா – என அமையும்ஐஞ்சீரடி நான்காகி வருவது.எ-டு : ‘செறிகின்ற ஞானத் தனிநாயகச் செம்மல் நாமம்எறிகின்ற வேலை அமுதிற்செவி யேக லோடும்மறிகின்ற துன்பிற் சயந்தன்மகிழ் வெய்தி முன்னர்அறிகின்றி லன்போல் தொழுதின்னவ னறைத லுற்றான்’(கந்த. வீரவாகு. 9)5. இரண்டு மாச்சீர், விளச்சீர், மாச்சீர், காய்ச்சீர் – என அமையும்ஐஞ்சீரடி நான்காகி வருவது.எ-டு : ‘கண்ணே வேண்டும் என்னினும் ஈயக் கடவேனென்உண்ணே ராவி வேண்டினும் இன்றே உனதன்றோபெண்ணே வண்மைக் கேகயன் மாதே பெறுவாயேல்மண்ணே கொண்ணீ மற்றைய தொன்று மறவென்றான்’ (கம்பரா. 1522)6. நான்கு விளச்சீர், ஒரு காய்ச்சீர் – இவை கொண்டமைந்த ஐஞ்சீரடிநான்காகி வருவது.எ-டு : ‘அஞ்சன வண்ணனென் னாருயிர் நாயக னாளாமேவஞ்சனை யாலர செய்திய மன்னரும் வந்தாரேசெஞ்சர மென்பன தீயுமிழ் கின்றன செல்லாவோஉய்ஞ்சிவர் போய்விடின் நாய்க்குக னென்றனை யோதாரோ’ (கம்ப.குகப.)7. மாங்கனிச்சீர், இரண்டு கூவிளம், இரண்டு தேமா – இவை. கொண்டமைந்தஐஞ்சீரடி நான்காகி வருவது.எ-டு : ‘தாமந்தரு மொய்ம்புடை வீரன்ச யந்தன் விண்ணோர்ஏமந்தரு வன்சிறைச் சூழலு ளேக லோடும்தாமந்திகழ் மெய்யுடைக் காவலர் துப்புநீங்கிமாமந்திர மாம்வலைப் பட்டும யங்க லுற்றார்.’ (கந்த. வீரவாகு.4)8. மாச்சீர், காய்ச்சீர் அல்லது விளச்சீர், இரண்டு விளச்சீர்இறுதியில் ஒரு மாச்சீர் – இவை கொண்டமைந்த ஐஞ்சீரடி நான்காகிவருவது.எ-டு : ‘வன்ம ருங்குல்வா ளரக்கியர் நெருக்கவங்கிருந்தாள்கன்ம ருங்கெழுந் தென்றுமோர் துளிவரக் காணாநன்ம ருந்துபோல் நலனற உணங்கிய நங்கைமென்ம ருங்குல்போல் வேறுள அங்கமு மெலிந்தாள்’ (கம்ப.காட்சிப்.)9. மாச்சீர், விளச்சீர் நான்கு – இவைகொண்டமைந்த ஐஞ்சீரடி நான்காகிவருவது.எ-டு : ‘செஞ்நெ லங்கழ னிப்பழ னத்தய லேசெழும்புன்னை வெண்கிழி யிற்பவ ளம்புரை பூந்தராய்துன்னி நல்லிமை யோர்முடி தோய்கழ லீர்சொலீர்பின்னு செஞ்சடை யிற்பிறை பாம்புடன் வைத்ததே’. (தே. II 1-1)10. இரண்டு காய்ச்சீர், இரண்டு மாச்சீர், ஒரு காய்ச்சீர் – இவைகொண்டமைந்த அடி நான்காகி வருவது.எ-டு : ‘உருவார்ந்த மெல்லியலோர் பாகம் உடையீர்அடைவோர்க்குக்கருவார்ந்த வானுலகம் காட்டிக் கொடுத்தல்கருத்தானீர்பொருவார்ந்த தெண்கடலொண் சங்கம் திளைக்கும்பூம்புகலிதிருவார்ந்த கோஒயிலே கோயி லாகத் திகழ்ந்தீரே.’ (தே. II 54-1)11. முதலில் தேமா, பின் காய், அடுத்து இரண்டு மா அடுத்துக்காய்ச்சீர் – இவை கொண்டமைந்த ஐஞ்சீரடி நான்காகி வருவது.எ-டு : ‘துஞ்ச வருவாரும் தொழுவிப் பாரும்வழுவிப்போய்நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப் பாரும் முனைநட்பாய்வஞ்சப் படுத்தொருத்தி வாழ்நாள் கொள்ளும் வகைகேட்டுஅஞ்சும் பழையனூர் ஆலங் காட்டெம் மடிகளே.’ (தே. I 45-1)12. முதலில் விளம், பின் கூவிளம், அடுத்துக் குறிலீற்று இரண்டுதேமா, இறுதியில் தேமா – இவை கொண்டமைந்த ஐஞ்சீரடி நான்காகி வருவது.எ-டு : ‘நின்றுதொ டர்ந்தநெ டுங்கை தம்மை நீக்கிமின்றுவள் கின்றது போல மண்ணில் வீழ்ந்தாள்ஒன்றுமி யம்பலள் நீடு யிர்க்க லுற்றாள்மன்றல ருந்தொடை மன்ன னாவி யன்னாள்’. (கம்பரா. 1498) (வி. பா.படலம் 28)