அடிகள் சிலவாயும் பலவாயும் வந்து தத்தமில் ஒத்தும் ஒவ்வாதும்ஈற்றடி மிக்கு வருவன கலித்தாழிசையாம். இவற்றுள் ஈற்றடி மிக்கு ஏனையடிஒத்து வருவன எல்லாம். ‘சிறப்புடைக் கலித்தாழிசை’ எனவும், ஈற்றடிமிக்கு ஏனைய அடி ஒவ்வாது வருவன எல்லாம் ‘சிறப்பில்லாக் கலித் தாழிசை’எனவும் கூறப்படும். கலித்தாழிசை ஒரு பொருள் மேல் ஒன்றாயும் வரும்; ஒருபொருள்மேல் மூன்றடுக்கியும் வரும். இது கொச்சகக் கலியின் இனம்.ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வருவன கலியொத்தாழிசை எனப்படும்;ஒரோவழிக் கலித்தாழிசை எனவும் வழங்கப்படும்.எ-டு : ‘வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறிஎம்கேள்வரும் போழ்தின் எழால்வாழிவெண்திங்காள்!கேள்வரும் போழ்தின் எழாதாய்க்(கு) உறாலியரோநீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள்!இஃது ஒரு பொருள் மேல் ஒன்றாய், ஈற்றடிமிக்கு, ஏனை யடிகள் தம்முள்ஒத்து வந்துள்ளமையால் சிறப்புடைக் கலித்தாழிசை.எ-டு : ‘பூண்ட பறையறையப் பூதம் மருளநீண்ட சடையான் ஆடுமே;நீண்ட சடையான் ஆடும் என்பமாண்ட சாயல் மலைமகள் காணவே காணவே’.இஃது ஒரு பொருள் மேல் ஒன்றாய், ஈற்றடி மிக்கு, இரண் டாமடிகுறைந்து, ஏனையடி இரண்டும் ஒத்து வந்துள்ளமை யால் சிறப்பில்லாதகலித்தாழிசை.எ-டு : ‘கொய்தினை காத்தும்; குளவி அடுக்கத்தெம்பொய்தற் சிறுகுடி வாரல் நீ; ஐய! நலம் வேண்டின்.’‘ஆய்தினை காத்தும்; அருவி அடுக்கத்தெம்ஆசில் சிறுகுடி வாரல் நீ; ஐய! நலம்வேண்டின்.’‘மென்தினை காத்தும்; மிகுபூங் கமழ்சோலைக்குன்றச் சிறுகுடி வாரல்நீ; ஐய! நலம் வேண்டின்’.இவை இரண்டடியாய், ஈற்றடிமிக்கு, ஒரு பொருள்மேல் மூன்றடுக்கிவந்தமையால் கலியொத்தாழிசையாம். (யா.க. 87 உரை.)