கலித்தளை

நேர் ஈறாகிய மூவசைச்சீர் முன்னர் நிரை முதல் வெண்சீர் வரின்சிறப்புடைய கலித்தளையாம்; நிரை முதல் வெண்சீர் அல்லாத சீர் வரின்சிறப்பில்லாக் கலித்தளையாம். ஆகவே காய்முன் நிரை வருவது கலித்தளை.எ-டு : ‘செல்வப்போர்க் கதக்கண்ணன் செயிர்த்தெறிந்தசினவாழி’‘முற்றொட்டு மறவினை (முறைமையான் முயலாதார்)’என முறையே காண்க. (யா. க. 20 உரை)