கலிக்கு முடுகியல் வருதல்

கலிப்பாவில் எழுசீரடி பெரும்பாலும் முடுகிவரும்; அஃதன்றிஅறுசீரடியும் ஐஞ்சீரடியும் முடுகி வருதலுமுண்டு; சிறுபான்மைநாற்சீரடியும் முடுகிவரும்.எ-டு : ‘கவிரிதழ் கதுவிய துவரிதழ் அரிவையர் கலிமயிற் கணத்தொடுவிளையாட’என எழுசீரடி முடுகி வந்தது.’நெறியறி செறிகுறி புரிதிரி பறியா வறிவனை முந்துறீஇத்தகைமிகு தொகைவகை யறியும் சான்றவ ரினமாக’ (குறிஞ்சிக். 3)‘தகைவகை மிசைமிசைப் பாயியர் ஆர்த்துடன்’ (முல்லைக். 2)என முறையே அறுசீரடி ஐஞ்சீரடி நாற்சீரடி முடுகி வந்தவாறு. (தொ.செய். 65, 66, 67 நச்.)