கலிப்பாவிற்கு மூவசைச் சீருள் காய்ச்சீர் நின்று நிரை முதலாகியமூவசைச் சீரொடு தட்டல் வேண்டும் என்ற வரையறையின்று. நிரையீற்றுஇயற்சீரும், நிரையீற்று ஆசிரிய உரிச்சீரும் (நிரை நிரை, நேர் நிரை,நேர்பு நிரை, நிரைபு நிரை) நிற்ப, நிரை முதல் வெண்சீர் வந்து நிரையாய்ஒன்றினும் கட்டளைக் கலியடிக்குக் கலித்தளையாம்.எ-டு : ‘மணிபுரை திருமார்பின் மாமலராள் வீற்றிருப்ப’கருவிளம் என்ற இயற்சீர்முன் புளிமாங்காய் என்ற மூவசை வெண்சீர்வந்து நிரை ஒன்றிக் கலித்தளை ஆயிற்று.‘ஒங்குநிலை அகன்மார்பின் ஒளிதிகழு மாமேனி’நேர்பு நிரை என்ற ஆசிரிய உரிச்சீர் முன் புளிமாங்காய் என்ற மூவசைவெண்சீர் வந்து நிரை ஒன்றிக் கலித்தளை ஆயிற்று.ஆகவே, நிரையீற்று இயற்சீர் முன்னும் ஆசிரிய உரிச்சீர் முன்னும்நிரை முதல் இயற்சீர் வந்து நிரை தட்பினும், அவற்றின் முன் நேர்முதல்வெண்சீர் வந்து ஒன்றாதொழி யினும் துள்ளலோசை பிறவாமையின், இவை கட்டளைக்கலியடிக்கு ஆகா; ஆயின் சீர்வகைக் கலியடிக்கு ஆம்.எ-டு : ‘அணிமுகம் மதியேய்ப்ப அம்மதியை நனியேய்க்கும்மணிதிகழ் மாமழைநின் பின்னொப்பப் பின்னின்கண்’ (குறிஞ்சிக்.28)அணிமுகம் மதியேய்ப்ப நிரையீற்று இயற்சீர்முன் நிரைமுதல் வெண்சீர்வந்து நிரைதட்டுக் கலித்தனை ஆயிற்று; அடுத்து, (அவ்வடிக்கண்ணேயே)நேர்முதல் நிரைமுதல் வெண்சீர்கள் வரச் சிறிது துள்ள லோசைபிறந்தது.‘மணிதிகழ் மாமழை நின்’ – நிரையீற்று இயற்சீர் முன் நேர் முதல்வெண்சீர் வரினும், அடுத்து எல்லாச் சீர்களும் வெண் சீராக அடுக்கிவருதலின், சிறிது துள்ளலோசை பிறந்தது.(கட்டளைக் கலியடியில் முதற்சீரே இயற்சீராக வருதல் வேண்டும்.இயற்சீரினை இடையிலும் வரும் எனக் கொள்ளின் கலியடி பதின்மூன்றுஎழுத்தினும் சுருங்கிவிடும். ஆதலின் இயற்சீரை அடுத்த மூன்று சீரும்நிரை முதல் மூவசைச் சீராதலே கலியோசைக்கு ஏற்றது. (செய். 60 பேரா.)இங்ஙனம் சிறிது துள்ளலோசை பிறக்க வருதல் சீர்வகைக் கலியடிக்கேஏற்றது. ஆகவே, சீர் வகைக் கலியடிக்குப் பிறதளைகளும் விரவிவரலாம்.எ-டு :‘மடியிலான் செல்வம்போல் மரனந்தஅச்செல்வம்’ பாலைக். 34இவ்வடியுள் சீர்கள் 1, 2 – இயற்சீர் வெண்டளை.‘வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர்பெற்ற’ பாலைக். 24இவ்வடியுள் சீர்கள் 1, 2 – இயற்சீர் வெண்டளை; 2, 3 நிரையொன்றியஆசிரியத்தளை; 3-4 – நிரையொன்றிய ஆசிரியத்தளை. (தொ. செய். 59, 60, 61நச்.)