கலிக்காமூர்

இன்று அன்னப்பன் பேட்டை எனச் சுட்டப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைகிறது. ஞானசம்பந்தர் பாடல் பெற்றது இத்தலம். கடற்கரையைச் சார்ந்து அமைந்திருக்கிற தன்மையை இவர் பாடல்கள் விளக்குகின்றன.
மடல் வரையின் மது விம்மு சோலை வயல் சூழ்ந்து அழகாரும்
கடல் வரை ஓதம் கலந்து முத்தம் சொரியும் கலிக்காமூர் 363-1
மைவரை போற்றிரையோடு கூடிப்புடையே மலிந்தோதங்
கைவரையால் வளர் சங்கு மெங்கு மிகுக்கும் கலிக்காமூர் 363-2
குன்றுகள் போற்றிரை யுந்தியந்தண் மணியார் தரமேதி
கன்றுடன் புல்கியா யம்மனை சூழ் கவினார் கலிக்காமூர் 363-4
கடல் அருகே இருந்த இவ்வூரில் உப்பங்கழிகள் இருந்த நிலையை யும் காண, கழிகள் நிறைந்த விரும்பத் தக்க ஊர் என்ற நிலை யில் இவ்வூர்ப் பெயர் அமைந்து கழிக்காமூர் என்பது பின்னர் கலிக்காமூர் என்றாயிற்றோ என எண்ணத் தோன்றுகிறது.