ஈற்றடி ஒழித்து ஏனைய அடிகள் எழுத்து ஒவ்வாது வரும் வெண்பா;கட்டளைவெண்பாவிற்கு மறுதலையாயது.எ-டு :‘மந்தரமும் மாகடலும் மண்ணுலகும் விண்ணுலகும்அந்தரமும் எல்லாம் அளப்பரிதே – இந்திரர்கள்பொன்சகள ஆசனமாப் போர்த்து மணிகுயின்றஇன்சகள ஆசனத்தான் ஈடு’.இதன்கண், முதலடி எழுத்துப் பதினாறு, இரண்டாமடி எழுத்துப்பதினைந்து, மூன்றாமடி எழுத்துப் பதினான்கு – இவ்வாறு எழுத்துஎண்ணுகின்றுழி, ஒற்றும் ஆய்தமும் குற்றுகரமும் தவிர்க்கப்படும். (யா.வி. பக். 498)அலகு பெற்றாலும் குற்றுகரம் எழுத்தெண்ணப்படாது என்பதுவிருத்திகாரர் கருத்துப் போலும்.