கலம்பகமாலை

1. பல பூக் கலந்த மாலை; ‘கலம்பக மாலையைப் பணியாக’ (ஈடு. அவ.)2. கலம்பகம் தான் ஒருபோகும் அம்மானையும் ஊசலும் இன்றி ஏனைஉறுப்புக்கள் எல்லாம் வரப் பாடுவது கலம்பகமாலை என்னும் இலக்கணவிளக்கம் (பாட். 54). ஒரு போகினையும் அம்மானையையும் நீக்கி,வெண்பாமுதலாக எல்லா உறுப்பானும் குறைவின்றி வருவது இப்பிரபந்தம்என்னும் பன்னிரு பாட்டியல் (960). ஊசலையும் நீக்கி வருதல் வேண்டும்என்னும் செய்தி பிற பாட்டியல் எல்லாவற்றிலும் காணப்படுகிறது. கலம்பகமாலை ‘பன்மணிமாலை’ எனவும் படும்.