கலம்பகப் பாடல் தொகை

தேவர்க்கு நூறும், அந்தணர்க்குத் தொண்ணூற்றைந்தும், அரசர்க்குத்தொண்ணூறும், அமைச்சர்க்கு எழுபதும், வணிகர்க்கு ஐம்பதும், வேளாளர்க்குமுப்பதுமாகக் கலம்பகப் பாடல் தொகை பெறும். அந்தணரைத் தேவர்க்குஒப்பவும், குறுநில மன்னரை அரசர்க்கு ஒப்பவும் பாடப்பெறும்.இத்தொகை பன். பாட் 214, வெண். பாட் 12, நவ. பாட். 34, சிதம். பாட்.30, மு. வீ. யா. ஒ. 80 இவற்றிலும் காணப்படும். (இ. வி. பாட். 53)