கருவூர்

கரூர் எனச் சுட்டப்படும் இவ்வூர் திருச்சி மாவட்டத்தில் உள்ளது.எறிபத்தர், புகழ்ச்சோழர், கருவூர்த் தேவர் பிறப்பிடம். இக்கருவூர் ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். மேலும் இவ்விலக்கியங்கள் இதனை மணிமதிற் கருவூர் (பெரிய – புகழ்ச் -12) என்றும், எயில் சூழ் கருவூர் (நம் பி – திருத் -9) என்றும் சுட்டுவதை நோக்கவும், சோழ மன்னர்கள் முடி சூட்டிக் கொள்ளும் ஐந்து தலங்களுள் ஒன்றாக இதனைச் சுட்டுவதையும் நோக்க, இக்கருவூர் அரசியல் நிலையிலும் முக்கியத்துவம் பெற்றி ருந்தது எனத் தெரிகிறது. மேலும் பல கல்வெட்டுகளும் இவ்வூரில் அமைகின்றன. கற்பம் தோறும் தவம் செய்த பிரமன் படைப்புத் தொழில் செய்யக் கரு உற்பத்தி செய்த இடம் ஆதலின் ஊர் கருவூர் எனப்பெயர் பெற்றிருக்கிறது என்பர்… இங்குச் சுட்டப்பட்ட கருவூரே, சேரர்களின் தலைநகரான வஞ்சி என்பது பலர் எண்ணமாக அமைகிறது. இக்கருவூர்ப் பகுதி வஞ்சி மரங்கள் அடர்ந்த காடாய் இருந்ததால் வஞ்சுளா ரண்யம் என்று வழங்கப் பெற்றது. நகரமான பின் வஞ்சி மா நகரம் என்ற பெயர் வந்தது என்பர். 1. இரண்டாம் இராசாதிராசன் காலத்து நான்காம் ஆண்டு கல்வெட்டு இவ்வூரை உய்யக் கொண்டார் வள நாட்டு வெண்ணாட்டுக் குலோத்துங்கச் சோழ நல்லூராகிய கருவிலிக் கொட்டிட்டை என்று குறிப்பிட்டுள்ளது. திருநாவுக்கரசு நாயனார் அருளிச் செய்த தேவார திருப்பதிகங்கள் ஐந்தாம் திருமறை- பக். 3. 2. காவிரிப்பூம்பட்டினம், திருவாரூர், உறையூர், சேய் ஞலூர் என்பன பிற – வேங்கடம் முதல் குமரி வரை (III) பக். 237. 3. வேங்கடம் முதல் குமரி வரை III பக். 237 4. கருவூரே வஞ்சி – பக். 46 5. கொங்கு நாட்டுக் கோயில்கள் – பக், 212 மேலும் இவ்வூர்க் கோயில். இறைச் சிறப்பு காரணமாகப் பசு பதீச்சரம், பாஸ்கரபுரம், கருவூர்த் திருவானிலை என்றெல்லாம் சுட்டப்படுகிறது.