மன்னனுக்கு எல்லா வகையிலும் கருவாக (முக்கியமாக) அமைந்த ஊர் எனப் பொருள்படும்படி அமைந்த ஊராகக் கருத இடமுண்டு. தமிழ் நாட்டில் பண்டை நாளில் சிறந்து விளங்கிய நகரங்கள் பலவற்றுள் கருவூரும் ஒன்று, தற்காலத்தில் கரூர் என வழங்கப் பெறுகிறது. சங்க இலக்கியப் பாடல்கள் கருவூரின் பெருமையை எடுத்தியம்புகின்றன. அந்நகரின் செழிப்பையும், பண்டைப் பெருமையையும் விளக்குகின் றன. ஆன்பொருநை என்னும் ஆம்பிராவதி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள கருவூர் பண்டைச் சோழமன்னர் முடிபுனைந்து கொண்ட ஐந்து நகரங்களுள் ஒன்று என்பர். இருப்பினும் சேரனின் தலைநகரே கருவூர். ஓதஞானி, கதப்பிள்ளை, கிழார், கீரன், எயிற்றியனார், சேரமான்சாத்தன், பவுத்திரன், கண்ணம்பாளனார், கண்ணம் புல்லனார், கலிங்கத்தார், நன்மார்பன், பூதஞ்சாத்தனார்,பெருஞ்சதுக்கப் பூதநாதனார் ஆகிய புலமை சான்றோர் இவ்வூரினர். நற்றிணையில் 343 ஆம் பாடலும், குறுந்தொகையில் 64, 265, 380 ஆகிய பாடல்களும், அகநானூற்றில் 309. ஆம் பாடலும், புறநானூற்றில் 380 ஆம் பாடலும், 168 ஆம் பாடலும் கருவூர்த் கதப்பிள்ளைச் சாத்தனார் அல்லது கருவூர்க் கதப் பிள்ளைப் பாடியவை. நற்றிணையில் 281, 312 அகியபாடல்கள் கருவூர்க் கீரன் எயிற்றியனார் பாடியவை, குறுந்தொகையில் 71 ஆம் பாடல் கருவூர் ஓதஞானிபாடியது. 170 ஆம் பாடல் கருவூர் கிழார் பாடியது. கருவூர்ச் சேரமான் சாத்தன் பாடியது, 102 பவுத்திரன் பாடியது. அகநானூற்றில் 180, 263 ஆகிய பாடல்கள் கருவூர்க்கண்ணம் பாளனார். பாடியது. 63 ஆம் பாடல் கருவூர்க் சுண்ணம் புல்லனார் பாடியது. 183 அம் பரடல் கருவூர்க் கலிங்கத்தார் பாடியது..277 ஆம் பாடல் கருவூர் நன்மார்பன் பாடியது. 50 ஆம் பாடல் கருவூர்ப் பூதஞ்சாத்தனார் பாடியது. புறநானூற்றில் 219 ஆம் பாடல் கருவூர்ப் பெருஞ்சதுக்கப் பதனார் பாடியது.
“கடும் பகட்டியானை நெடுந்தேர்க் கோதை
திருமா வியனகர்க் கருவூர்முன்றுறை” (அகம். 9820 21)
“தந்தை தம்மூராங்கண்
தெண்டுணை கறங்கச் சென்றாண் டட்டனனே” (புறம். 78;11 12) 268 அம் பாடல் ஆம் பாடல் கருவூர்ப்
(தந்தை தம்மூர் என்றது தாம் தோற்றிச் செய்த நகரமே யன்றி உறையூரும், கருவூரும் முதலாகிய ஊர்களை என்பது உரை.)