கருவிலி

இப்பெயராலேயே இன்றும் வழங்கப்படும் இவ்வூர் தஞ்சையில் அமைகிறது. அப்பரால் பாடல் பெற்ற இத்தலம் (183) கருவிலி என்றும் கொட்டிட்டை எனவும் சுட்டப்படுகிறது. கருவிலிக் கோலவார் பொழிற் கொட்டிட்டை – 183-2 கருவில் பிறவாதவன் என்ற பெயரில் சிவன் பெயரே இவ்வூர்ப் பெயருக்குக் காரணமா என்பது ஆய்வுக்குரியது. கல்வெட்டிலும் இப்பெயரே காணப்படுகிறது,.