கருவியின் நால் வகைகள்

அகக்கருவி, அகப்புறக்கருவி, புறக்கருவி, புறப்புறக்கருவி – எனக்
கருவி நால்வகைப்படும். இவை முறையே புணர்ச்சிக்குரிய நிலைமொழி பற்றி
வரும்விதிகளைக் கூறுவன, புணர்ச்சி யிலக்கணம்- திரிபு- புணர்ச்சிவகை-
சாரியை- முதலியன பற்றிக் கூறுவன, நிலைமொழி வருமொழிகளாய் நிற்கும்
மொழிகளைக் கூறுவன, மொழிகள் ஆதற்குரிய எழுத்துக் களின் இலக்கணமும்
பிறப்பும் கூறுவன ஆம்.
(தொ.எ. 1 நச். உரை)