கரும்பனூர்‌

கரும்பு என்ற தாவரப்‌ பெயருக்கும்‌ இவ்வூர்ப்‌ பெயர்க்கும்‌ உள்ள கொடர்பு ஆய்ந்தால்‌ ஏதாவது தோன்றலாம்‌. கரும்பனூர்‌ கிழான்‌ என்ற சங்க கால வள்ளல்‌ வேங்கட நாட்டைச்‌ சார்ந்தவன்‌ என்று நன்னர்கனார்‌ கூறுவதால்‌ கரும்பனூர்‌ என்பது வேங்கட மலையைச்‌ சார்ந்த நாட்டைச்‌ சார்ந்தது என்று எண்ண இடமளிக்கிறது. புறநானூற்றில்‌ 381 மற்றும்‌ 384 ஆகிய இரண்டு பாடல்களும்‌ கரும்பனூர்‌ கிழானை நன்னாகனார்‌ பாடியவை.
“சிறுநனி, ஒருவழிப்‌ படர்க என்றோனே, எந்தை,
ஒலிவெள்‌ அருவி வேங்கடநாடன்‌
உறுவரும்‌ சிறுவரும்‌ கஊழ்மாறு உய்க்கும்‌
அறத்துறை அம்பியின்‌ மான, மறப்புஇன்று,
இருங்கோள்‌ ஈராப்‌ பூட்கை,
கரும்பனூரன்‌ காதல்‌ மகனே.” (புறம்‌. 381: 21.26)