சிலப்பதிகாரத்தில் இளவேனில் வந்தபொழுது மன்னர் முன் தோன்றியவர்களைப் பற்றிக் கூறும்பொழுது கருநாடகக் கூத்தரும் தோன்றினர் எனக் கூறப்பெற்றுள்ளது. கருநாடகம் என்பது ஆதியில் கிழக்குத் தொடர்ச்சி மலைக்கு மேற்கேயுள்ள பீடபூமியைக் குறித்தது. இப்பொழுது மைசூர் இராச்சியமே பண்டைக் கருநாடகமாகும். சென்னை இராச்சியம் முழுமையும் ஆங்கிலேயர் வசமான போது அவர்கள் கிழக்குத் தொடர்ச்சி மலைக்குக் கிழக்கே குமரி முதல் குண்டூர் வளை தாம் அடைந்த பகுதி முழுவதையும் கருநரடகம் என்றழைத்தனர்.
இப்போது பம்பாய் இராச்சியத்திலுள்ள பெளகாம், தார்வார், பீஜப்பூர் ஆகிய மாவட்டங்களும், ஜாத், கோலாப்பூர் ஆகிய முன்னாள் சுதேச சமஸ்தானங்களும் அடங்கிய பகுதி கருநாடகம் என வழங்கப் பெறுகிறது.. கருநாடகம் என்பது வடமொழிச் சொல் எனக் கருதப்பட்டாலும், அது தமிழ்ச்சொல்லே என்கிறார் கால்டுவெல். ‘கருநிற நிலம்’ அதாவது கருநிற மண்ணுடைய நாடு என்னும் பொரு ளுடைய தமிழ்ச்சொல் என்றும், இது தென் தக்காணத்திலுள்ள பீடபூமியைக் குறிக்கும் என்றும், பின்னர் இது கன்னட மொழி பேசுவோருடைய நாடு என்று ஆயிற்று என்றும் கருதுகிறார்.
“வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் வாழ்கெனக்
கொங் கணக்கூத்தரும் கொடுங் கருநாடரும் (சிலப் 3:26:105 106)