ஞான மருதாந்த நல்லூர் என இன்றுச் சுட்டப்படும் இவ்வூர் தஞ்சாவூர் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற தலம் (279). மஞ்சுறு பொழில் வளர் மலி கருக்குடி என இதன் வளத்தை. நாம் உணருகிறோமே தவிர, பெயரின் பொருள் தெளிவு றவில்லை. மருதாந்த நல்லூர் மருத நிலம் அல்லது மருதமரம் காரணமாக ஏற்பட்டதாக இருக்கலாம்