கருகாவூர் இன்று காளாவூர் எனச் சுட்டப்படுகிறது. தஞ்சையைச் சார்ந்தது. ஞானசம்பந்தர் அப்பர் பாடல் பெற்றது இத் தலம் (304, 229). ஆதரவில்லாத பெண்ணுக்கு இறைவி மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததனால் இத்தலம் கருகாவூர் எனப் பெயர் பெற்றது என்பர் என்ற எண்ணத்தைக் கேட்கின் றோம். இலக்கியப் பாடல்களின் நிலையில் இப்பெயர்க் காரணம் தெளிவாகவில்லை.