கரவீரம்’ என்பது கரையபுரம்’ என்று வழங்கப்பட்டு, தஞ்சை மாவட்டத்தில் இன்று அமைகிறது. கரவீரம் என்பது பொன்னிறப் பூக்களைத் தருகின்ற ஒரு மரத்தின் பெயர். பொன்னலரி என்றும் அதனைக் குறிப்பதுண்டு. இன்றும் கரவீரம் கோயிலில் பொன்னலரியே தலவிருட்சமாகப் போற்றப்படுகின்றது என்ற எண்ணத்தை இப்பெயர் குறித்துத் தருகின்றார் ரா.பி,சேதுப்பிள்ளை. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலத்தைப் பற்றி (58) திருநாவுக்கரசரும் குறிப்பிடுகின்றார் (265-6).