கரந்துறை பாட்டு

ஒரு பாட்டைச் செம்மையாக எழுதினால் அதன் ஈற்று மொழிக்குமுதலெழுத்துத் தொடங்கி எதிரேறாக இடை யிடை ஓரெழுத்தாக இடையிட்டுமுதன்மொழி முதலெழுத்து வரை வாசிக்கப் பிறிதொரு செய்யுளாக அதனகத்துமறைந் துறைவது கரந்துறை செய்யுளாம் என்று வீரசோழியமும் மாறனலங்காரமும்கூறும். (வீ. சோ. 181 உ ரை. மா. அ. 288)ஒரு செய்யுளை முடிய எழுதி அதன் ஈற்றயல் மொழியுள் முதலெழுத்துத்தொடங்கி ஒரோரெழுத்து இடையிட்டு வாசிக்கப் பிறிதொரு செய்யுளாகப்பாடுவது காதை கரப்பு என்று தண்டியலங்காரமும் இலக்கண விளக்கமும்கூறும். (தண்டி. 98-7; இ.வி. 690-14; மு.வி. சொல்லணி 13)எ.டு -‘தாயேயா நோவவா வீரு வெமது நீபின்னை வெருவா வருவதொ ரத்தபவெம்புகல் வேறிருத்தி வைத்திசி னிச்சைகவர்தாவா வருங்கலநீ யே’“எங்களுக்குத் தாவா அருங்கலம் நீயே, தாயே! யாம் நோவு அவா ஈரு (க);எமது (சார்வாயுள்ள) நீ பின்னை வெருவா வருவது ஒ(ஓ)ர் (க); அது தபஎம்புகல் வேறு இருத்தி வைத்தி சின்; இச்சை கவர் (க)” எனப் பிரித்துப்பொருள் செய்க.இப்பாடலுள் முற்கூறிய முறையான் நோக்க,‘கருவார் கச்சித்திருவே கம்பத்தொருவா வென்னீமருவா நோயே’என்னும் வஞ்சித் துறைப்பாடல் அமைந்துள்ளமை காணலாம்.‘வருங்கல நீயே’ என்பதனுள் ஈற்றுமொழி ‘நீயே’. அதற்கு முதலெழுத்து‘ல’. லகரம் மொழி முதலாகாமையின் அதன் முன் நின்ற ககரம் முதலாகக்கொள்ளப்பட்டது.