கரந்துறை செய்யுள்

வேறொரு செய்யுளுக்குரிய எழுத்துக்கள் யாவும் தன்னிடைத் தேயேஇருக்குமாறு பாடப்படும் பாடல் கரந்துறை செய்யு ளாம். கரந்து உறைதலாவதுஒரு செய்யுட்குரிய எழுத்துக்கள் தன்னிடத்தே இடம் மாறி மறைந்திருத்தல்.மிறைக்கவிகளுள் இச்செய்யுளும் ஒன்று.எ-டு :‘அகலல்குற் றேரே யதர மமுதம்பகர்தற் கரிதிடையும் பார்க்கின் – முகமதியம்முத்தென்ன லாமுறுவன் மாதர் முழுநீலமைத்தடங்கண் வெவ்வேறு வாள்’இப்பாடற்கண்‘அகர முதல வெழுத்தெல்லா மாதிபகவன் முதற்றே யுலகு’என்னும் குறட்பாவிற்குரிய எழுத்துக்கள் யாவும் இடம் மாறிஅமைந்துள்ளமையின் இப்பாடல் கரந்துறை செய்யுள் ஆகும்.(தண்டி. 98-8; இ.வி. 690 – 15)மாறனலங்காரம் காதைகரப்பைக் கரந்துறை செய்யுளாகவும், கரந்துறைசெய்யுளைக் காதை கரப்பாகவும்கொண்டு இலக்கணம் கூறும். இவ்விலக்கணம்அந்நூலுள் காதை கரப்புக்குக் கொள்ளப்படும். (மா. அ. 288, 289)முத்துவீரியம் இதனைக் கரந்துறை பாட்டு என்னும்.(சொல்லணி. 14)