கம் என்பது கம்மியரது தொழில். இத்தொழிலை உணர்த்தும் கம் என்ற சொல்
இருவழியும், தொழிற்பெயர் போல, வன்கணம் வரின் உகரமும் வல்லெழுத்தும்,
மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின் உகரமும் பெற்றுப் புணரும்.
எ-டு : கம்முக் கடிது, கம்மு மாண்டது, கம்மு வலிது – அல் வழி;
கம்முக்கடுமை, கம்முமாட்சி, கம்முவலிமை – வேற்றுமை; யகரம் வருவழி கம்
யாது, கம் யாப்பு – என இருவழியும் இயல்பாகப் புணரும்; உயிர் வருவழி
மகரம் இரட்டித்து கம் மடைந்தது, கம்மடைவு – எனப் புணரும். (தொ.எ.328
நச். உரை) வேற்றுமைக்கண் பெயர் வருமொழியாக நிகழின், அக்குச் சாரியை
இடையே பெற்றுக் கம்மக்குடம், கம்மநெருப்பு, கம்மவிறகு – என்றாற் போலப்
புணரும். (329 நச். உரை)