கமுகந் தோட்டம்

தோட்டத்துள் பிற மரம் செடிகொடிகள் உளவாயினும், மிகுதி பற்றிய
வழக்கால் கமுகந்தோட்டம் எனப்படுமாறு போல, உயிரீற்றுப் புணரியலுள்
புணரியல் பற்றிய பிற பொதுச் செய்திகள் இடம் பெறினும்,
பெரும்பான்மையும் உயிரீற்றின் முன் வருமொழிப் புணர்ச்சியே
கூறப்படுதலின், அப்பெயர், மிகுதி பற்றிய வழக்கால் வந்தது. (நன். 151
சங்கர.)