பல நூல்களது வகைமையாலும், மதியது பெருமையாலும், கற்றார் வியக்கும்வண்ணம், கல்லாத நூல்களையும் உய்த் துரைக்கும் கருத்துடைய புலவன்.(யா.வி.பக். 552; வீ.சோ. 181 உரை)நிறைந்த கல்விப் பயிற்சியானும் அக்கல்விப் பயிற்சியால் தெளிந்தஅறிவானும், முன்னர்க் கற்றுவல்லோர் கூறிய பொருளை ஞாபகத்தானும்செம்பொருள் நடையானும் நேரிட்டு எந்நூற் பொருளையும் விரித்துச் சொல்லவல்லோன். (இ. வி. பாட். 171)