கன்றாப்பூர்

கண்ணாப்பூர் என்று வழங்கப்படும் இவ்வூர் இன்று தஞ்சை மாவட்டத்தில் அமைகிறது. திருநாவுக்கரசர் பாடல் பெற்ற தலம் இது (275) இவரின் பாடல்களினின்றும் இவ்வூர்ப் பெயர் விளக்கம் தெரியவில்லை. சேக்கிழார் வழியில் சிவத்தலங்கள் நூலாசிரியர் (பக் 203) சைவப் பெண் ஒருத்தி வைணவனுக்கு வாழ்க்கைப்பட்டு மாமியார் வீட்டார் காணாதபடி கன்றுக்குட்டி கட்டி இருந்த முளை (ஆப்பு) யைச் சிவமாகப் பாவித்து வழிபட்டு வந்தாள். ஒரு நாள் கணவன் அதைக் கண்டு, கோடாரியால் வெட்ட அதிலிருந்து சுவாமி வெளிப்பட்டார். அதனால் கன்றாப் பூர் என்று பெயர் பெற்றது என்கின்றார். பிற எண்ணங்கள் தெளிவுறவில்லை.