கன் என்பது கன்னாருடைய தொழிலையும், கன்னானையும், செம்பு என்ற
உலோகத்தினையும் குறிப்பதாகும். அஃது அல்வழிக்கண் வன்கணம் வரின்
உகரமும் வல்லெழுத்தும், மென்கணமும் இடைக்கணத்து வகரமும் வரின்
உகரமும், யகரம் வரின் இயல்பும், உயிர்வரின் னகரம் இரட்டுதலும் பெற்று
முடியும்.
எ-டு : கன்னுக் கடிது; கன்னு நன்று, கன்னு வலிது; கன் யாது; கன்
னரிது.
வேற்றுமைப்பொருட்புணர்ச்சிக்கண் அல்வழிக்கோதிய விதியும் பெறும்;
உகரச்சாரியையை விடுத்து அக்குச்சாரியை பெறுதலு முண்டு.
எ-டு : கன்னுக்கடுமை, கன்னக்கடுமை, கன்னக்குடம், எனவும்;
கன்னுஞாற்சி, கன்னஞாற்சி – எனவும்; கன்னுவன்மை, கன்னவன்மை – எனவும்
வரும்.
(தொ. எ. 345, 346, நச். உரை)
யகரம் வருவழி இயல்பாகவும், உயிர் வருவழி னகரம் இரட்டித்தும்
புணரும். எ-டு : கன்யாப்பு, கன்னருமை
சிறுபான்மை அல்வழிக்கண் வன்கணத்து அகரமும் மெல் லெழுத்தும்,
மென்கணத்து அகரமும் கொள்ளப்படும்.
எ-டு : கன்னங் கடிது, கன்ன ஞான்றது, கன்ன மாண்டது
கன்னங்கடுமை எனச் சிறுபான்மை குண வேற் றுமைக்கண்ணும் வரும்.
(345, 346 நச். உரை)
மின் – பின் – பன்- எனும் னகரஈற்றுப்பெயர் போலவே, கன் என்னும்
நிலைமொழியும், இருவழிக்கண்ணும் தொழிற்பெயர் போலவே உகரம் பெற்று
முடியும். கன் என்பது வேற்றுமைப் பொருட்புணர்ச்சி யாயின், பொருட்
பெயரொடு புணருங் கால் அகரம் பெற்று வல்லெழுத்து மிக்கு முடியும்.
எ-டு : கன்னுக் கடிது, கன்னுச் சிறிது கன்னுத் தீது, கன்னுப்
பெரிது; கன்னு ஞான்றது, கன்னு நீண்டது, கன்னு மாண்டது; கன்னு வலிது –
அல்வழி
கன்னுக்கடுமை, கன்னுச்சிறுமை, கன்னுத்தீமை, கன்னுப்பெருமை;
கன்னுஞாற்சி, கன்னுநீட்சி, கன்னு மாட்சி; கன்னுவலிமை –
வேற்றுமை
கன்னக்குடம், கன்னச்சாடி, கன்னத்தூதை, கன்னப் பானை – வேற்றுமைப்
பொருட்புணர்ச்சி
இனி, குணப்பெயரொடு புணருங்காலத்தும், சிறுபான்மை அகரமும்
வல்லெழுத்தும் பெற்று முடிதலும், அகரமும் மெல் லெழுத்தும் பெற்று
முடிதலும் கொள்க. கன்னக் கடுமை, கன்னங்கடுமை – எனவரும். (இ.வி.எழுத்.
127)