கந்துகவரி

மகளிர் பந்தாடும்போது பாடும் பாடல் வகை. சிலப்பதி காரத்துள்வஞ்சிமகளிர் பாண்டியனைத் ‘தேவர்ஆர மார் பன்வாழ்க என்றுபந்த டித்துமே’என வாழ்த்திப் பந்தாடு வதாக இவ்வரி நிகழ்கிறது.கந்துகம் – பந்து; வரி – ஒருவகை இசைப்பாடல். (சிலப். 29 பாடல்20-22.)