கதுவாய் பற்றிய இரு கருத்து

நாற்சீரடியாகிய அளவடியில் முதலயற்சீர் ஒழித்து ஏனைய சீர்களில் மோனைமுதலிய தொடை வருதல் ’மேற்கதுவாய்’ என்றும், கடையயற்சீர் ஒழித்து ஏனையசீர்களில் மோனை முதலிய தொடை வருதல் ’கீழ்கதுவாய்’ என்றும் இலக்கணஆசிரியர் பலரும் கொண்டனர்.கையனார் முதலிய ஒருசார் ஆசிரியர் முதலயற்சீர் ஒழித்த ஏனையசீர்களில் மோனை முதலிய தொடை வருதலைக் ‘கீழ்க்கதுவாய்’ என்றும்,கடையயற்சீர் ஒழித்து ஏனைய சீர்களில் மோனை முதலிய தொடை வருதலை ‘மேற்கதுவாய்’ என்றும் கொண்டனர். (யா. க. 47 உரை)