கண மங்கலம்

முத்தி நாயனார் பிறந்த ஊரான இ. இன்று கணமங்கலத் திடல் என வழங்கப்படுகிறது. திருஞான சம்பந்தர் பாடல் பெற்ற திருத்தண்டலை நீணெறி என்ற சிவன் கோயில் தலத்தைப் பக்கத்தில் கொண்ட ஊர். இன்று இக்கோயிற் பகுதி தண்டலைச் சேரி என வழங்கப்படுகிறது.
வரும்புனற் பொன்னி நாட்டொருவாழ்பதி
சுரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட
விரும்பு மென் கணுடையவாய் விட்டுநீள்
கரும்பு தேன் பொழியும் கணமங்கலம் (19-1)
என சேக்கிழார் இத்தலத்தைப் பாடுகின்றார். கண்ணமங்கை என்றதொரு ஊர்ப்பெயரைக் காண நாம். இவ்வூரும் திருமால் கோயில் காரணமாகக் கண்ணமங்கலம் என்று அமைந்து, கண மங்கலம் எனச் சுட்டப்பட்டிருக்கலாமோ என்று நினைக்கலாம்.