குறுமாணக் குடி என்ற பெயரில் இன்று தஞ்சை மாவட்டத்தில் அமைகிறது இவ்வூர். வைத்தீஸ்வரன் கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது. இந்திரன் சாபம் நீங்கப் பெற்றத் தலம். இறைவன் கண்ணாயிர நாதர். தீர்த்தம், இந்திரதீர்த்தம் போன்ற எண்ணங்கள் இத்தலத்துடன் இந்திரனுக்குரிய தொடர்பு காட்டும் நிலையில் அமைகிறது. மேலும் மாவலிபால் சென்று மூவடி மண் கேட்ட வாமன மூர்த்தி ஆகிய குருமானி வழிபட்டமையால் பெற்ற பெயர் என்றும் அறிகின்றோம்.. இதனை நோக்க திருக் கண்ணார் கோயில் என்பது இங்குள்ள சிவன் கோயில் சிறப்பு நிலையில் கோயிற் பெயரால் ஊர்ப்பெயர் சுட்டும் நிலையில் அமைந்தது எனினும் இதன் பழம்பெயர் இப்போதைய பெயரே எனத் தோன்றுகிறது. இப்பெயர் பற்றி நோக்கும் போது இன்று குருமாணக் குடி எனச் சுட்டப்படினும், கல்வெட்டில் குரு வாணியக்குடி பெயர் காணப்படுவதை நோக்க வாணியர் கள் நிறைந்த இடம் என்ற பெயரில் அமைந்த வாணியக் குடி என்ற பெயர், சிறு கிராமத்தைக் குறிக்கும் நிலையில் வாணியக் குடி என்றழைக்கப்பட்டு, இன்று குறுமாணக் குடி என்று திரிந்து வழங்கப்படுகிறது எனல் பொருந்தும். * 3 என்ற – ஞானசம்பந்தரும்,
மறுமாணுருவாய் மற்றிணையின்றி வானோரைச்
செறு மாவலிபாற் சென்றுல கெல்லா மளவிட்ட
குறுமாணுருவன் றற்குறியாகக் கொண்டாடும்
கறுமாகண்டன் மேயது கண்ணார் கோயிலே (101-5)
என்று பாடும் நிலையில், குறுமாணக் குடி என்று வாணியக் குடியை எண்ணும் நிலை அவர் காலத்திலேயே தோன்றியதோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.