திருக்கண்ணபுரம் என்று வழங்கப்படும் ஊர் தஞ்சையைச் சார்ந்து அமைகிறது. ஐந்து கிருஷ்ணன் கோயில் தலங்களுள் இதுவும் ஒன்று. இவ்வூர் வைணவ மக்கள் மனத்தைப் பெரிதும் கவர்ந்தது என்பதும், இங்குள்ள திருமால் பெருஞ்சிறப்புடை யவனாகக் கருதப்பட்டான் என்பதும் இதைப் பற்றிக காணப்படும் மிகுதியானப் பாடல்கள் சுட்டும் நிலையாகக் கொள்ளலாம். பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகரப்பெருமாள். திருமங்கை ஆழ்வார், நம்மாழ்வார் ஆகியோரால் இத்தலமும் சுட்டப்படு கணபுர நகர் என்றும் (நாச்சி -535) கணபுரம் என்றும் (குல -719) கண்ணபுரம் என்றும் (திருமங் (1648) இவ்வூர் பல நிலைகளில் சுட்டப்படுகிறது. கன்னி மாமதிள் புடை சூழ் கண்ணபுரம் (1650) கார்வானம் நின்றதிரும் கண்ணபுரம் (1651) கடிக்கமலம் கள்ளுகுக்கும் கண்ணபுரம், (1652) கற்ற நூல் மறையாளர் கண்ணபுரம் (1655) போன்ற பல பாடலடிகள் கண்ணபுரத்தின் சிறப்பு சுட்டும் சில சான்றுகள். கிருஷ்ணன் காரணமாகப் பெயர் பெற்ற ஊர் இது என்பது கண்ண (ன்) புரம் என்ற பெயரிலேயே தெரிகிறது. கண்ணன் மிகமிக மகிழ்ந்து நித்திய வாசம் செய்யத் தேர்ந்தெடுத்த தலம் ஆனதால் இதற்குக் கண்ணபுரம் என்று பெயர் எனவும், கிருஷ்ண ரண்ய ஷேத்திரம். அஷ்டாஷர மகாமந்திர. சித்தி ஷேத்திரம் எனப் பிறப்பல பெயர்கள் உடையது எனவும் அறிகின்றோம்.