திருமங்கையாழ்வார் பாடல் பெற்ற தலம் திருக் கண்ணங் குடி
குவளை நீள் முளரி குமுதமொண் கழுநீர்
கொய்ம்மலர் நெய்தல் ஒண்கழனி
திவளு மாளிகை சூழ் செழுமணிப் புரிசைத்
திருக் கண்ணங் குடியுள் நின்றானே (1749)
போதலர் புன்னை மல்லிகை மௌவல்
புதுவிரை மதுமலர் அணைந்து
சீதவொண் தென்றல் திசைதொறும் கமழும்
திருக் கண்ணங் குடியுள் நின்றானே (1750) சிகர நன்மாடத்திருக் கண்ணங்குடி (1751) போன்ற அனைத்துப் பாடல்களிலும் கண்ணங்குடியின் இயற்கை வளத்தைச் சிறப்பிக்கின்றார் ஆழ்வார். இவ்வூர்ப் பெயரையும் திருமால் கோயில் சிறப்பையும் நோக்க, கண்ணங்குடியிருக்கு மிடம் என்ற நிலையில் கண்ணன்குடி என்ற பெயரே கண்ணங் குடி என்றாயிருக்கலாம் எனத் தோன்றுகிறது.