கண்டீரம்‌

கண்டீரம்‌ என்ற சொல்‌ சதுரக்கள்ளி என்ற பொருளையுடையது. இது மலைப்பகுதியில்‌ காணும்‌ தரவர வகை, இவ்‌ வகைத்‌ தாவரம்‌ நிறைந்த பகுதி என்னும்‌ பொருளில்‌ கண்டீரம்‌ என இவ்வூர்‌ பெயர்‌ பெற்றிருக்க வாய்ப்பு உண்டு, பெருநள்ளி என்ற வள்ளல்‌ கண்டீரம்‌ என்ற ஊரின்‌ தலைவன்‌. எனவே கண்டீரக்‌ கோப்‌ பெருநள்ளி எனப்‌ பெற்றான்‌. இவனை வன்பரணர்‌ பாடிய பாடல்கள்‌ சங்க இலக்கியத்தில்‌ இடம்‌ பெற்றுள்ளன. கடையெழு வள்ளல்களில்‌ ஒருவனாகிய கண்டீரக்கோப்‌ பெருநள்ளி தோட்டி என்னும்‌ மலைக்கும்‌ அதைச்‌ சார்ந்த மலை நாட்டுக்கும்‌ தலைவன்‌ எனத்‌ தெரிவதால்‌ கண்டீரம்‌ என்பது தோட்டி, மலைப்பகுதியைப்‌ சார்ந்ததாக இருக்குமோ என்று எண்ணச்‌ தோன்றுகிறது. புறநானூற்றில்‌ 148 முதல்‌ 151 வரையுள்ள பாடல்கள்‌ வன் பரணர்‌ கண்டீரக்கோப்‌ பெருநள்ளியைப்‌ பாடியவை.
இரும்பு புனைந்து இயற்றாப்‌ பெரும்பெயர்த்‌ தோட்டி
அம்மலை காக்கும்‌ அணி நெடுங்குன்றின்‌,
பளிங்கு வகுத்தன்ன தீம்‌ நீர்‌
நளிமலை நாடன்‌ நள்ளிஅவன்‌ எனவே (புறம்‌. 150:24 28)