கண்டியூர்

திருக் கண்டியூர் என வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர். மாவட்டத்தில் அமைகிறது திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் இருவராலும் பாடல் பெற்ற தலம் கண்டியூர் என்றால் வல்வினை போம் என்பது நாவுக்கரசர் கூற்று (307-7). இதன் செழிப்பினைச் செங்கயல் பாய் வயல் ஓடை சூழ்ந்த திருக்கண்டியூர் என்கின்றார் சேக்கிழார் (பெரிய 34 351-4). பாடல்களினின்றும் இவ்வூர்ப் பெயர்க் காரணம் விளங்கவில்லை. எனினும், கண்டி என்பதற்கு மந்தை என்றும் எழுபத்தைந்து ஏக்கருள்ள ஒரு நில அளவை என்றும் தமிழ் லெக்ஸிகன் குறிப் பதைக் காண மந்தை வெளியாக இருந்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது. (vol [ [ pa | பக் 689) சிவபெருமான் பிரமாவின் தலையைக் கொய்த இடம் ஆதலால் பெற்ற பெயர் என்பர். திருமங்கையாழ்வார் பாடலும் இவ்வூர் பற்றி. இங்கு திருமால் குடி கொண்டு இருக்கும் நிலை பற்றி பேசுகிறது. (திருக்குறுந் -19)