கண்டமங்கலம்

தென் ஆற்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டத்திலும், தஞ்சாவூர்
மாவட்டம் மன்னார்குடி வட்டத்திலும், இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை
வட்டத்திலும் என மூன்று இடங்களில் இவ்வூர்ப்பெயர் இருப்பதை அறியமுடிகிறது.  சுவடியில், “இராமநாதபுரம் ஜில்லா
கண்டமங்கலம்” (831-த) என்றிருப்பதைக் காணும்போது இவ்வூர் இராமநாதபுரம்
மாவட்டம் திருவாடானை வட்டத்தைச் சேர்ந்ததென்பது தெளிவு.