கட்டிடம் போன்றவற்றை ஒட்டியன

செயற்கையாக உருவாக்கப்படும் கட்டிடம் போன்றவற்றைக் குறித்து வரும் சொற்கள் ஊர்ப்பெயர்களின் பொதுக்கூறுகளாக வந்துள்ளன. ஆசிரமம், ஆலை, கொட்டம், கொட்டாரம், கோட்டை, கோயில், சத்திரம், சாவடி, பங்களா, பழஞ்சி, பள்ளி, மடம், மந்தை, ரோடு, வீடு, ஸ்டேசன் ஆகிய வடிவங்கள் ஊர்ப்பெயர்கலின் பொதுக்கூறுகளாக வந்துள்ளன.