கட்டளை வெண்பாவில் வெண்சீர்

வெண்சீர் முதற்சீராய் நிற்ப வெண்சீர் வந்து ஒன்றிய வெண்டளைகட்டளைவெண்பாவிற்கு வேண்டா. அது கட்டளைக்கலி ஓசைக்கே தக்கது. ஆகவே,வெண்சீர் நிற்ப இயற்சீர் வந்து ஒன்றிய வெண்டளையே கட்டளை வெண்பா விற்குஏற்றது.வெண்சீர் நிற்ப வெண்சீர் வந்து ஒன்றிய வெண்டளை செப்ப லோசைக்கும்துள்ளலோசைக்கும் ஒப்ப உரியதாகலின் அஃது ஏற்றதன்று. வெண்சீர்இயற்சீரொடு தட்ட வெண்டளையே செப்பலோசைக்கு ஏற்றது. (தொ. செய். 55நச்.)