கட்டளை வஞ்சிஅடி

முதற்சீர் ‘மாசேர்காடு ‘ – நேர் நேர் நேர்பு – மூவெழுத்துச்சீராகக் கொண்டு‘கால்காய்ந்தது காம்புநீடி’ 3 + 3 – ஆறெழுத்தடி‘நல்கூர்ந்தது வில்லோர்சுரம்’ 3+4 – ஏழெத்தடி‘வான்பெய்தது மண்குளிர்ப்புற’ 3+5 – எட்டெழுத்தடி‘தேன்பெய்தது செழுநகர்தொறும்’ 3+6 – ஒன்பதெழுத்தடிஎன, ஆறெழுத்து முதல் ஒன்பதெழுத்து முடியக் கட்டளை வஞ்சியடிவந்தவாறு.முதற்சீர் ‘மாசேர்சுரம்’ நேர்நேர்நிரை – நாலெழுத்துச் சீராகக்கொண்டு,‘மண்மாய்ந்தென உள்வீழ்ந்தது’ 4+3 – ஏழெழுத்தடி‘விண்மாய்ந்தென மேல்தொடுத்தது’ 4 + 4 – எட்டெழுத்தடி‘காடோங்கிய கல்கெழுசுரம்’ 4 + 5 – ஒன்பதெழுத்தடி‘கோடோங்கிய குறும்பொறைமருங்கு’ 4+6 – பத்தெழுத்தடிஎன, ஏழெழுத்து முதல் பத்தெழுத்து முடியக் கட்டளை வஞ்சியடிவந்தவாறு.முதற்சீர் ‘புலி சேர் சுரம்’ நிரைநேர்நிரை – ஐயெழுத்துச் சீராகக்கொண்டு,‘மழைபெய்தென வான்வெள்ளென்று’ 5+3 = எட்டெழுத்தடி. ‘தழைபச்செனத்தண்ணென் காவு’ 5+4 = ஒன்பதெழுத்தடி‘கமழ்பூந்துணர் கள்ளவிழ்தொறும்’ 5+5 = பத்தெழுத்தடி‘இமிழ்தூங்கிசை இனச்சுரும்புவர’ 5+6 = பதினோரெழுத்தடிஎன, எட்டெழுத்து முதல் பதினோரெழுத்து முடிய கட்டளை வஞ்சியடிவந்தவாறு.முதற்சீர் ‘புலிவருசுரம்’ நிரை நிரை நிரை – ஆறெழுத்துச் சீராகக்கொண்டு,‘அமைவிடுநொடி அஞ்சியோர்த்து’ 6+3 – ஒன்பதெழுத்தடி‘கனைகுரலன கானத்தளகு’ 6+4 – பத்தெழுத்தடி‘தினைப்புனத்திதண் அயற்பிரியாது’ 6+5 = பதினோரெழுத்தடி‘மனைக்குறமகள் கடைப்புறந்தரும்’ 6+6 = பன்னீரெழுத்தடிஎன ஒன்பதெழுத்து முதல் பன்னீரெழுத்து முடியக் கட்டளை வஞ்சியடிவந்தவாறு. இவ்வாறே ஒழிந்தனவும் உறழ்ந்து கொள்ளப்படும். இருசீர்வஞ்சியடிக்கே கட்டளை சொல்லப்படும். (தொ. செய். 57 நச்.)