கட்டளை, கலம்பகம் வகை

எல்லா அடிகளும் எழுத்து ஒத்து வரும் பாடல் கட்டளைப் பாடல் எனவும்,எல்லா அடிகளும் எழுத்து ஒவ்வாது வரும் பாடல் கலம்பகப் பாடல் எனவும்ஒரு சாராரால் வழங்கப் படும். படவே,கட்டளை வெண்பா கலம்பக வெண்பாகட்டளை ஆசிரியம் கலம்பக ஆசிரியம்கட்டளைக் கலி கலம்பகக் கலிகட்டளை வஞ்சி கலம்பக வஞ்சிஎன நாற்பாக்களையும் இரு கூறுபடுத்து வழங்குதலும் உண்டு. (யா. வி.பக். 497. 502.)