கட்டளை – வரையறை; வரையறைப்பட்ட சீர்களான் அமைத லின், கட்டளையடிபிறக்கிறது. நால்வகைப் பாவிற்கும் கட்டளையடி வருமாறு.வெண்பாவின் கட்டளையடிக்கு மிக்க எல்லை 14 எழுத்தே ஆயினும் இரண்டுகாய்ச்சீர் அடுத்தடுத்து வருதல் துள்ள லோசையைக் காட்டுதலின்,கட்டளையடிக்கு அது கூடாது.எ-டு : ‘அறிவறிந்தார்த் தேற்றிய க்கா லஞ்சுவ தில்லை’ என, இவ்வடி 14 எழுத்துடையதே யாயினும் காய்ச்சீர் இரண்டுஇடையீடின்றி அடுத்தடுத்து நிகழ்தலின் கட்டளை யடி யாகாது. (தொ. செய்.58 நச்.)கட்டளையாசிரிய அடியில் வெண்சீரும் ஆசிரிய உரிச்சீரும் பொருந்தநிற்றல் இல்லை; நீடு கொடி, உரறு புலி என முன் நிரையீற்றனவாகிய ஆசிரியஉரிச்சீர் இரண்டும் வரலாம்.எ-டு :‘ ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ’ (புறநா. 55)‘ களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை’ (புறநா. 64) (தொ. செய். 24நச்.)நேர்நேர்பு, நேர்நிரைபு என்பன ‘பாதிரி’ போலக் கொள்ளப் பட்டுவருஞ்சீர் முதலசையோடு ஒன்றுவதும்.எ-டு. :‘ காரேறு பொருத கண்ணகன் செறுவின்’‘ வானிரைத்து மணந்து ……………..’நிரைநேர்பு ‘கணவிரி’ போலக் கொள்ளப்பட்டு வருஞ்சீர் முதலசையோடுஒன்றுவதும், நிரைநிரைபு வருஞ்சீர் முதலசையோடு (நிரையாக)ஒன்றுவதும்.எ.டு. :‘ வெயிலாடு முசுவின் (குருளை யுருட்டும்) ’ (குறுந். 38)‘ செழும்பயறு கறிக்கும் புண்கண் மாலை’ (குறுந். 338)என இவையெல்லாம் நிரையொன்றிய ஆசிரியத்தளையாம்; ({MĒṞPAṬI} 56நச்.)இயற்சீர் வெள்ளடி ஆசிரியப்பாவின் கட்டளையடியாகாது;சீர்வகையடியேயாம்.எ-டு. : ‘எறும்பி யளையிற் குறும்பல் சுனைய’ (குறுந். 12)கட்டளைக் கலிப்பா அடியுள் தேமா புளிமாச் சீர்கள் வருதலில்லை.({MĒṞPAṬI} 25. நச்.)கலியடியில் முதல் மூன்றுசீரும் நிரை முதலாகிய வெண்சீராக நிற்ப,ஈற்றுச்சீர் நேர் முதலாகிய வெண்சீராக வரினும், அது நிரை முதலாகவேகருதப்படும், துள்ளலோசை பிறத்தலான்.எ-டு. ‘அடிதாங்கு மளவின்றி யழலன்ன வெம்மையால்’ (கலி. 11)({MĒṞPAṬI} 29 நச். )நேர்பு நிரை, நிரைபு நிரை என முதற்சீர் நின்று, பிற முச்சீர் களும்நிரை முதலாகிய வெண்சீராகவரினும், துள்ள லோசையே பிறத்தலின்கட்டளைக்கலியடியாம்.எ-டு : ‘ ஓங்குதிரை யடுக்கம்பாய்ந் துயிர்செகுக்கும் துறைவகேள்’‘ விளங்குமணி ப் பசும்பொன்னின் வியலறைமேல் விளையாடி’({MĒṞPAṬI} 24. நச்.)இனி, நிரையீற்று இயற்சீரும் நிரையீற்று ஆசிரிய உரிச்சீரும் நிற்ப,நிரை முதலாகிய வெண்சீர் வந்து நிரையாக ஒன்றினும் துள்ளல் ஓசைபிறத்தலின் கட்டளையடியேயாம்.எ-டு : ‘ மணிபுரை திருமார்பின் மறுத்தயங்கத் தோன்றுங்கால்’‘ ஓங்குநிலை யகன்மார்பின் ஒளிதிகழு மாமேனி’ ({MĒṞPAṬI} 60. நச்.)இனி, கட்டளை வஞ்சியடி இருசீரான் நடக்கும் சமநிலை வஞ்சியடியே யன்றிமுச்சீரான் நடக்கும் வியநிலை வஞ்சியடி யாகாது. வஞ்சிச்சீரின் மிக்கஎழுத்து ஆறு.1. வஞ்சிச்சீர், தன்முன்னர்தான் வந்தும், 2. நிரை நிரைபு என்றஇயற்சீர் நிற்பத் தன்சீர்வந்தும், 3. தன்முன்னர் வெண்சீர் வந்தும், 4இரண்டு வெண்சீர் வந்தும். 5 ஆசிரிய உரிச்சீர் வந்தும் தூங்கலோசைபிறத்தலின், அவ்வடியெல்லாம் கட்டளையடியே. அவை முறையே வருமாறு :எ-டு : 1. ‘வசையில்புகழ் வயங்குவெண்மீன்2. திசைதிரிந்து தெற்கேகினும்3. தற்பாடிய தளியுணவின்4. புட்டேம்பப் புயன்மாறி’ (பட். 1 – 4)5. ‘புள்ளுதுயின்று புலம்புகூர்ந்து’ (செய். 22 நச்.)கட்டளையடியின் வேறுபட்டு வருவன சீர்வகை அடியாம்.