எ-டு :‘உறாஅர்க் குறுநோய் உரைப்பாய் கடலைச்செறாஅஅய் வாழியென் நெஞ்சு’ (கு. 1200)உறாஅர்க், செறாஅஅய் – கட்டளை அளபெடைத் தொடை.‘பாஅல் அஞ்செவிப் பணைத்தாள் மாநிரைமாஅல் யானையொடு மறவர் மயங்கி’ (கலி.5)பாஅல், மாஅல் – இருவகையடியும் வந்த அளபெடைத் தொடை.(முதலடிக்கட்டளை; ஏனையது சீர்வகை)‘எஃஃ கிலங்கிய கையராய் இன்னுயிர்வெஃஃகு வார்க்கில்லை வீடு’எஃஃகு, வெஃஃகு – கட்டளை ஒற்றளபெடை‘கஃஃ றென்னும் கல்லதர்க் கானிடைச்சுஃஃ றென்னும் தண்தோட்டுப் பெண்ணை’கஃஃ, சுஃஃ – சீர்வகை ஒற்றளபெடை. (தொ. செய்.97. நச்.)