கட்டளைக் கலிப்பா

கலிப்பா இனத்துள் ஒன்று. முதல்சீர் மாச்சீரும் பின் மூன்று ஈரசைச்சீரும் கூடியது அரையடியும், அவ்வாறே பின்வரும் நான்கு சீர் அரையடியும்ஆக எண் சீரடி நான்குடையதாய், முதலசை நேரசையாயின் அரையடிக்கு எழுத்துப்பதினொன் றும். நிரையசையாயின் பன்னிரண்டும் பெற்று ஏகாரத்தால் முடிவதுஇவ்வினப்பா. இஃது எழுத்தெண்ணப் பெறுதலால் கட்டளைக் கலிப்பாஎனப்பட்டது. முதற்சீர் மாச்சீரும், ஏனை மூன்றும் கூவிளச்சீருமாகவருவது பெரும்பான்மை. ‘மாஞ்சீர் கலியுட் புகா’ (யா.கா. 40) என்றஇலக்கணம் இதற்குப் பொருந்தாது. (தொ. வி. 236)எ-டு : ‘இல்லை என்ப திலையோர் மருங்கிலேஎவ்வ றங்களு முண்டோர் மருங்கிலே’ (காசிக். 90)இது நேரசை முதலாகிய கட்டளைக் கலிப்பாவுள் முதலடி.எ-டு : ‘படுத்த பாயுட னேபிணி மூழ்கினும்பல்வி ழுந்து நரைத்தற மூப்பினும்’ (காசிக். 24)இது நிரையசை முதலாகிய கட்டளைக் கலிப்பாவுள் முதலடி.